அடுத்த முதல் அமைச்சர் அஜித் குமார்? பரபரப்பாகும் வதந்தி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருந்த அஜித், அவசரமாக அங்கிருந்து நாடு திரும்பும் முயற்சியில் ஈடுபட்டார்.

ஆனால், அவர் சென்னை வருவதற்குள் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுவிட்டது. இதையடுத்து தனது மனைவியை அழைத்துக் கொண்டு அதிகாலை, ஜெயலைதாவின் சமாதியில் மலர் வளையம் வைத்து அஜித் அஞ்சலி செலுத்தினார்.

இதற்கிடையில், அதிமுக-வின் அடுத்த தலைமை அஜித்திடம் செல்ல இருப்பதாகவும், தமிழகத்தின் அடுத்த முதல்வர் பட்டியலில் அஜித் இருப்பதாகவும் ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட பல மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இது குறித்த தகவல்களுக்கு விளக்கம் அளித்துள்ள அஜித் தரப்பு, அஜித்குமாருக்கு அரசியலில் எந்த ஈடுபாடும் கிடையாது. ஜெயலலிதாவின் தைரியம் அவருக்கும் ரொம்ப பிடிக்கும், அதன் காரணமாக அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்து அவர் அவசரமாக கிளம்பி வந்தார்.

மற்றபடி, அவர் அரசியலில் ஈடுபட மாட்டார், அவரது குணத்திற்கும் அரசியல் சரிபட்டு வராது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.