அந்தமான் தீவில் 800 சுற்றுலாப் பயணிகள் மீட்பு

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் ஒன்றான ஹேவ்லாக்கில் உள்ள 800 சுற்றுலாப் பயணிகளை மீட்டு வர இந்திய கடற்படைக்குச் சொந்தமான 4 கப்பல்கள் விரைந்துள்ளன.

ஹேவ்லாக் அருகே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் பேரிடர் மீட்புக் குழுவினர், சுற்றுலாப் பயணிகளை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி இந்திய கடற்படைக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

போர்ட்பிளேருக்கு 310 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கையாக இந்த  நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.