ரிலையன்ஸ் Lyf ஸ்மார்ட் போன் வெடிக்கின்றன?

ரிலையன்ஸ் Lyf ஸ்மார்ட் போன் வெடிக்கின்றன

கடந்த சில மாதங்களில் சாம்சங் நோட் 7 ஸ்மார்ட் போன்கள் தொடர்ந்து சூடு தாங்காமமால் எரிந்தும் வெடித்தும் நாசமாயின. மேலும் விமானத்தில் பயணி ஒருவரின் செல்போனும் வெடித்து சிதறியதால் விமான நிறுவனங்கள் சாம்சங் ஸ்மார் போன்களுக்கு தடை விதித்தது. இதனால், அந்த மாடல் போன்களை சாம்சங் ஸ்மார்ட் போன் நிறுவனம் வாபஸ் வாங்கியது.

இந்நிலையில், சமீபத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ ஆபர்களுடன் கூடிய அறிமுகப்படுத்திய எல்ஒய்எப் ஸ்மார்ட் போன்கள் தற்போது வெடித்து சிதறியது. மும்பையிலுள்ள தன்வீர் சாதிக் என்பவரின் ரிலையன்ஸ் எல்ஒய்எப் போன் இன்று வெடித்து சிதறியதாகவும், இதில் எனது குடும்பம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும் தன்னுடைய டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.