ரேண்டம் நம்பர்ஸ் குறும்படம் முன்னோட்டம்

கற்பிதா வர்ச்சுவல் ரியாலிட்டி ஸ்டுடியோ பிரைவெட் லிமிடெட் தயாரித்துள்ள ரேண்டம் நம்பர்ஸ்.

இக்குறும்படத்தின் திரைக்கதையை ப்ரவீன் சந்தர் எழுத எஸ்.எஸ்.தளபதி மற்றும் ப்ரஷாந்த் மோண்ட்டி இயக்கியுள்ளனர். இதில் ஜான் விஜய், அர்ஜூன், சித்தார்த் கோபிநாத், மிருதுளா ஶ்ரீதரன், வேதா ஹ்ருதயா நடென்ட்லா ஆகியோர் நடித்துள்ளனர்.

இக்குறும்படத்திற்கு ஒளிப்பதிவாளர் அனிஷ் தருண் குமார், இசை பரத் ஷங்கர், படத்தொகுப்பாளர் விஜய் வேணு இரண்டு நண்பர்கள் இணைந்து ஒரு சாப்ட்வேரை தயாரிக்கிறார்கள்.அதனை கொண்டு மக்களின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்பது மேலும் அவர்களை பிளாக் மெயில் செய்வது போன்ற செயல்களை செய்கின்றனர்.

இந்நிலையில் ஒருமுறை இவர்களின் சூழ்ச்சியை கண்டுபிடித்த ஒரு மர்மநபர் இவர்களுக்கு ஒரு அபாயகரமான கட்டளையிடுகிறான். அந்த கட்டளையை ஏற்றார்களா..? அதன்பின் அவர்களுக்கு என்ன நடந்தது..? என்பதை திரில்லராக கூறும் குறும்படம்தான் ரேண்டம் நம்பர்ஸ்.