ரஜினியின் 2-வது மகள் சவுந்தர்யா பிரிகிறார்?

ரஜினியின் 2-வது மகள் சவுந்தர்யா. இவர் ‘கோவா’ படத்தை தயாரித்தார். சரித்திர பின்னணியுடன் உருவான ரஜினியின் அனிமே‌ஷன் படமான ‘கோச்சடையான்’ படத்தை இயக்கினார்.

சவுந்தர்யாவுக்கும் தொழில் அதிபர் அஸ்வின் ராம்குமாருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்த நிலையில் சவுந்தர்யாவும், அஸ்வின் ராம்குமாரும் தற்போது பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது.

என்றாலும் விவாகரத்து கோரி இரு தரப்பிலும் மனுதாக்கல் செய்யப்படவில்லை. இருவரையும் சேர்த்து வைப்பதற்கான முயற்சிகள் ஒருபக்கம் நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.