ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா உருவப் படம் எரிப்பு

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா, தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதும், முறைப்படி விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் செளந்தர்யா மத்திய அமைச்சகத்தின் விலங்குகள் நல வாரியத்தின் விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டார்.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடை விதித்திருப்பது இந்த விலங்குகள் நல வாரிய அமைப்புதான். எனவே, இதற்கு விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்ட செளந்தர்யாவுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த நிலையில், திருச்சி திருவள்ளூர் பேருந்து நிலையம் அருகே, தமிழர் வீர விளையாட்டு மீட்பு கழகம் சார்பில், இன்று செர்ந்தர்யாவின் உருவப் படம் எரித்து போராட்டம் நடத்தப்பட்டது.

இன்று சௌந்தர்யா  ரஜினிகாந்த் பிறந்த தினம் என்பது குறிப்பிடத்தக்கது.