இந்த தீபாவளியை கொண்டாடும் வகையில் ஒரு காசுக்கு 10 லட்சம் காப்பீடு ரயில்வேத்துறை அறிவிப்பு

ரயில் பயணிகளுக்கான 10 லட்சம் காப்பீடு ஒரு காசாக குறைக்கப்பட்டுள்ளது. ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் 92 காசு பிரிமியம் செலுத்தி 10 லட்சம் காப்பீடு பெறும் திட்டம் கடந்த மாதம் 1ம் தேதியில் இருந்து நடைமுைறப்படுத்தப் பட்டது. புறநகர் ரயில் பயணிகள் தவிர மற்ற அனைத்து பயணிகளும் இந்த வசதியை பெற முடியும்.   5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், வெளிநாட்டினருக்கு இது பொருந்தாது.

ரயில் பயணத்தின்போது விபத்து போன்ற காரணங்களால் மரணம் அடைந்தவர்கள் மற்றும் நிரந்தர ஊனம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம், பகுதி ஊனம் அடைந்தவர்களுக்கு 7.5 லட்சம், மருத்துவ செலவாக ’2 லட்சம் வரை இழப்பீடு, இறந்தவர் உடலை கொண்டு செல்லும் செல்ல 10 ஆயிரம் வழங்கப்படும்.

இதுகுறித்து ஐஆர்சிடிசியின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான ஏ.கே. மனோச்சா, தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: ஒரு பைசாவில் பயணக் காப்பீடு எனும் திட்டத்தை உடனடியாக அறிமுகப்படுத்த முடிவு செய்தோம். இதன்மூலம், இந்தத் திட்டத்தை மேலும் பிரபலப்படுத்த முடியும். அதேபோல், அதிக அளவிலான பயணிகளும் இந்தத் திட்டத்தை பயன்படுத்துவார்கள்.

கடந்த மாதம் 1-ஆம் தேதி 92 பைசாவில் பயணக் காப்பீடு என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தை வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, 1.2 கோடி ரயில் பயணிகள் பயன்படுத்தியுள்ளனர் என்று மனோச்சா தெரிவித்தார். இத்திட்டத்தின்கீழ், ரயில் விபத்துக் காப்பீடு எடுத்திருக்கும் பயணி உயிரிழக்க நேரிட்டால், அவரது குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.