பேங்க் ஆப் பரோடா விளம்பரத்திற்காக ரூ.8 கோடி ஒப்பந்தம் செய்த பி.வி.சிந்து

ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, பரிசு மற்றும் பாராட்டு மழையில் நனைந்த நிலையில், தற்போது கோடிகளில் புரள தொடங்கியுள்ளார்.

பிரபல விளம்பர நிறுவனம் ஒன்று அவரை ரூ.50 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.

இந்த நிலையில், பேங்க் ஆப் பரோடா அவரை ரூ.8 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம், சிந்து விளையாடும் போது அணியும் டி-சர்ட்டில் பேங்க் ஆப் பரோடா பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும். இந்த ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு போடப்பட்டுள்ளது.