சென்னை மெரினாவில் சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது

மெரீனாவில் மாணவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்ததால் அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதையடுத்து குடியரசு தின விழாவுக்கான ஏற்பாடுகள் இன்று காலை முழுவீச்சில் தொடங்கியது.

காந்தி சிலை அருகில் மேடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பணியில் பொதுப்பணித்துறை ஈடுபட்டுள்ளது.

மீண்டும் புதுப்பொலிவுடன் திகழும் வகையில் கடற்கரை சாலை சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் மெரீனா கடற்கரையிலும் சுகாதாரப் பணிகள் தீவிரமாக நடக்கிறது. அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றி வருகிறார்கள். பொக்லின் எந்திரம் மூலம் குப்பைகள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.

சாலையில் சிதறிக் கிடந்த மணல்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. கடற்கரையில் மணல்கள் சமப்படுத்தப்பட்டு வருகிறது. அங்கிருந்த தற்காலிக கழிவறைகளும் சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.