பொன் ராதாகிருஷ்ணன் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார்

தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் ஜெயலலிதாவை மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், இனயம் பகுதியில் அமைய உள்ள துறைமுகம் மற்றும் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட உள்ள சாலை திட்டப் பணிகள் தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசியதானத் தெரிவித்தார்.

காவிரி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முதல்வர் ஜெயலலிதாவுடன் பொன். ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்துவார் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன.

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து கர்நாடகாவில் வன்முறை வெடித்தது. கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதாவை மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சந்தித்துப் பேசியுள்ளார்.