பொங்கல் விடுமுறை – விளக்கம்

பொங்கல் பண்டிகை பல ஆண்டுகளாக மத்திய அரசின் விருப்ப விடுமுறை பட்டியலில் தான் இருந்துள்ளது.(இணைப்பு: 2013 மற்றும் 2017க்கான மத்திய அரசு விடுமுறை பட்டியல்கள்)

 

ஒவ்வொரு ஆண்டும் 14 கட்டாய விடுமுறைகளை தவிர, 3 கூடுதல் விடுமுறைகளை அந்தந்த மாநிலத்தில் இருக்கும் மத்திய அரசு ஊழியர் நல ஒருங்கிணைப்பு குழு தேர்வு செய்துகொள்ளலாம்.(இது மாநில அரசின் குழு அல்ல, அந்த மாநிலத்தில் பணி புரியும் மத்திய அரசு ஊழியர்களை கொண்ட குழு). இந்த 3 விடுமுறை தினங்கள் எது என்பது மாநிலத்துக்கு மாநிலம் மாறும், ஆண்டுக்கு ஆண்டு கூட மாறலாம்.

இந்த ஆண்டு – சிவ ராத்திரி, விநாயகர் சதுர்த்தி மற்றும் நவராத்திரியில் ஒரு நாள் என 3 தினங்களை தேர்வு செயத்துள்ளது இந்த ஊழியர் நலக் குழு. பொங்கல் பண்டிகை ஏற்கனவே பலருக்கு விடுமுறையான இரண்டாவது சனிக்கிழமையில் வருவதால், அதை விடுத்து வேறு 3 நாட்களை தேர்வு செய்து மொத்தம் 4 விடுமுறைகளை பெறலாம் என்று குழு உறுப்பினர்கள் கருதியதாக கூறப்படுகிறது.