வேந்தர் மூவிஸ் மதன் எங்கே தோழியிடம் காவல்துறையினர் விசாரணை

தலைமறைவு ஆகிவிட்ட சினிமா பட அதிபர் மதனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர். அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மதனின் கூட்டாளிகள் சுதிர், குணா ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் மதனின் தோழி ஒருவரை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர்.

வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து மதனின் தோழியிடம்  ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. மதன் எங்கே இருக்கிறார்? என்று அவரிடம் போலீசார் விசாரித்தனர். தீவிர விசாரணைக்கு பிறகு அவரை அனுப்பி வைத்தனர்.