பிச்சைக்காரன் படத்தின் கதாநாயகி ரகசியத் திருமணம்!

நடிகை சாட்னா டைட்டஸ், எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர், விஜய் ஆண்டனி நடித்து வெற்றி பெற்ற பிச்சைக்காரன் படத்தில் கதாநாயகியாக நடித்து கவனம் பெற்றவர்.

தமிழில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ரகசிய திருமணம் செய்துகொண்டுள்ளார்.

பிச்சைக்காரன் படத்தைத் தமிழகம் முழுவது வெளியிட்டது கே.ஆர். பிலிம்ஸ். இந்த நிறுவனத்தைச் சேர்ந்த கார்த்திக்கை சாட்னா ரகசியத் திருமணம் செய்துகொண்டுள்ளார். இருவருடைய காதலுக்கு சாட்னாவின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததால் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

இத்திருமணம் குறித்து கார்த்திக் ஒரு பேட்டியில் கூறியதாவது: திருமணம் நடந்து ஒருமாதமாகிவிட்டது. முறைப்படி பதிவு திருமணம் செய்துகொண்டுள்ளோம். திருமணத்துக்குப் பிறகு சாட்னா நடிப்பதைக் குறைத்துக்கொண்டுள்ளார். விரைவில் ஊர் அறிய திருமணம் நடைபெறும் என்று அவர் பேட்டியளித்துள்ளார்.