இந்து முன்னணி நிர்வாகி மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

ஆற்காட்டில் இந்து முன்னணி நிர்வாகி மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனையடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆற்காடு ராஜாகோரி தெருவை சேர்ந்தவர்  எம். இளங்கோ( 36) ஆற்காடு நகர இந்து முண்ணனி அமைப்பின்  தலைவராக உள்ளார் மேலும் சினிமா திரையரங்களில் உள்ள கேன்டீன்களுக்கு உணவு பொருட்கள் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

இவருக்கு  பூர்ணிமா(27)  என்ற மனைவியும் ஜெயஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் செவ்வாய்கிழமை இவரது  மனைவி, மகளை குடியாத்தம் நகரில்  உள்ள உறவினர் வீட்டில் விட்டுவிட்டு மீண்டும் ஆற்காடு வந்து தனது வேலைகளை முடித்துக்கொண்டு நள்ளிரவில் மோட்டார் சைக்களில்  வீட்டிற்கு சென்றுள்ளார்.

அந்த குண்டு இளங்கோ கழுத்தில் விழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இளங்கோ, அங்கிருந்து தப்பி ஓடினார். அதற்குள் அங்கிருந்த மற்றொரு நபர், இன்னொரு பெட்ரோல் குண்டை இளங்கோ மீது வீசினார். அது இளங்கோ முதுகில் விழந்தது. இதனால் கத்தியபடியே இளங்கோ அங்கிருந்து ஓடினார். அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர், பெட்ரோல் நிரம்பிய பாட்டிலை அவர் மீது வீசினார். அது இளங்கே மீது படவில்லை.

இளங்கோ அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். ஆட்கள் வருவதையறிந்த மர்ம நபர்கள், தாங்கள் வந்த ஆட்டோவில் ஏறி தப்பிச் சென்றனர். பொதுமக்கள் துரத்தியபோது, அவர்கள் மீது பெட்ரோல் குண்டை வீசி விடுவதாக மிரட்டியபடி சென்றனர். இதுகுறித்து, ஆற்காடு டவுன் போலீசில் இளங்கோ புகார் செய்தார். ராணிப்பேட்டை டி.எஸ்.பி., விஜயகுமார் விசாரணை செய்தார். பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை பிடிக்க, நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இளங்கோவை கொலை செய்ய முயன்ற சம்பவத்தால், அங்கு ஏராளமான இந்து முன்னணி மற்றும் பா.ஜ., வினர் திரண்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியதால், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.அப்போது  வீட்டின் அருகே இருந்த மர்ம நபர்கள் பிளாஸ்டிக் கவரில் பெட்ரோல் நிரப்பட்ட  குண்டை இளங்கோமீது வீசியுள்ளார். அதோபோல் எதிர் திசையில் இருந்தும் மற்றொரு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.