தனி நபர் வருமான வரி குறைப்பு

மத்திய பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரி உச்ச வரம்பில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

அதே சமயம், ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் சம்பலம் பெறுபவர்களுக்கு விதிக்கப்பட்ட 10 சதவீத வரி, தற்போது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீத கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.

ரூ.3 லட்சம் வரை சம்பளம் பெறுபவர்களுக்கு வருமான வரி இல்லை. மேலும், ஒரே ஒரு பக்கத்தில் வருமான வரி விண்ணப்ப படிவம் வெளியிடப்படும்.

அரசியல் கட்சிகளுக்கு ஒருவர் ரொக்கமாக ரூ.2 ஆயிரம் மட்டுமே நன்கொடை வழங்க முடியும்.