திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அறை எடுக்க முன் பணம் ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்கும் விடுதிகளில் அறை எடுக்க வசூலிக்கப்பட்ட முன் பணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி கோவிலில் தங்குவதற்கு அறை எடுக்கும் பக்தர்களிடம் முன் பணமாக (டெபாசி) மூன்று மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. அறையை காலி செய்யும் போது, ரசீதை காட்டி செலுத்திய முன் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். இதற்காக சிறப்பு கவுண்டர்களும் செயல்பட்டு வந்தன.

இந்த நிலையில், முன் பணத்தை திரும்ப பக்தர்கள் செல்லுவதால், அறையை காலி செய்வதற்கு காலதாமதம் ஆவதால், பிற பக்தர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் அறை கிடைக்காமல் போகிறது. இதன் காரணமாக முன் பணம் வசூலிப்பதை நிறுத்த தேவஸ்தானம் முடிவு செய்து, பரிசோதனை முறையிலும் அதை செயல்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் நல்ல பலன் கிடைக்க தற்போது அதை நடைமுறைபடுத்தியுள்ளது.

எனவே, இனி திருப்பதியில் அறை எடுக்கும் பக்தர்கள் முன் பணம் செலுத்த வேண்டியதில்லை. அதே சமயம், அறையை பதிவு செய்யும் பக்தர்கள் ஒரு நாட்களுக்குள் அறையை காலி செய்ய வேண்டும். கூடுதலாக மறுநாள் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அதற்கு காரணத்தை ஆதாரங்களுடன் தெரிவிக்க வேண்டும். சாமி தரிசனம் செய்ய தாமதம் ஏற்பட்டதால் அறையை காலி செய்ய முடியவில்லை. என்றால் தரிசன டிக்கெட்டை காட்ட வேண்டும், என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.