நடுவானில் விமானத்தில் பயணிகள் அடி உதை தரையிறக்கிய விமானி

பெல்ஜியம் நாட்டின் புருசெல்ஸ் நகரில் இருந்து மால்டாவிற்கு ரைனர் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று கடந்த வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தது. விமானம் இத்தாலி நாட்டின் எல்லைக்குள் சுமார் 30 ஆயிரம் அடிக்குமேல் பறந்து கொண்டிருந்தது.

அப்போது பயணிகளுக்கு இடையில் திடீர் கைகலப்பு ஏற்பட்டது. இதனால் விமானத்திற்குள் பரபரப்பு ஏற்பட்டது. விமானப் பணிப்பெண்கள் அவர்களின் சண்டையை விலக்க முயற்றி செய்தனர். இதற்கு பலன்கிட்டவில்லை. இதனால் விமானத்தின் கதவை திறந்து விடக்கூடாது என்பதில் மற்ற பயணிகள் கவனமாக இருந்தனர்.

இதனால் சண்டையில் ஈடுபட்டவர்கள் அந்த பயணிகளையும் தாக்கினார்கள். அந்த சமயத்தில் சண்டையில் ஈடுபட்ட ஒருவர் பணிப்பெண்ணின் முகத்தில் ஒரு குத்துவிட்டார். இதற்குப் பிறகும் தாமத்திக்கக்கூடாது என்று பணிப்பெண்கள் விமானியிடம் சம்பவம் குறித்து தெரியப்படுத்தினார்கள்.

விமானி உடனடியாக விமானத்தை அவசரமாக தரையிறங்க இருக்கிறது என்று. அதன்பின் ஒரு வழியாக சண்டை ஓய்ந்தது. விமானம் இத்தாலியில் உள்ள பிசாவில் தரையிறங்கியது. அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனர். சண்டையில் ஈடுபட்டவர்களை போலீசாரிடம் ஒப்படைத்த பின்னர் விமானம் மீண்டும் மால்டாவிற்கு புறப்பட்டுச் சென்றது.