பாரா ஒலிம்பிக் நிறைவடைந்தது

பாரா ஒலிம்பிக் நிறைவடைந்தது

மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியான ‘பாராலிம்பிக்’ கடந்த 7 ஆம் தேதி தொடங்கியது.

159 நாடுகளைச் சேர்ந்த 4,342 வீரர்கள் பங்கேற்ற இப்போட்டி நேற்று நிறைவடைந்தது.

15 வது பாரா ஒலிம்பிக் பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்று வந்தது. இப்போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே பதக்கங்களை வென்று குவித்து வந்த சீனா, 107 தங்கம், 81 வெள்ளி, 51 வெண்கலம் என்று மொத்தம் 239 பதக்கங்களுடன், பதக்க பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

64 தங்கம் உள்பட 147 பதக்கத்துடன் இங்கிலாந்து 2வது இடத்தையும்,  உக்ரைன் 41 தங்கம் உள்பட 117 பதக்கங்களை வென்று 3 வது இடத்தையும் பிடித்துள்ளது. அமெரிக்கா 4-வது இடமும் (40 தங்கம் உள்பட 115 பதக்கம்) பெற்றன.

இந்தியா 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என்று 4 பதக்கத்துடன் 43-வது இடத்தை பிடித்துள்ளது.

இந்தியா தரப்பில் தமிழகத்தை சேர்ந்த உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் மற்றும் ஈட்டி எறிதல் வீரர் தேவேந்திர ஜாஜாரியா ஆகியோர் தங்கப் பதக்கமும், குண்டு எறிதல் வீராங்கனை தீபா மாலிக் வெள்ளிப் பதக்கமும், உயரம் தாண்டுதல் வீரர் வருண் சிங் வெண்கலமும் வென்றனர்.

பாரா ஒலிம்பிக் நிறைவு விழா இந்திய நேரப்படி நேற்று அதிகாலை மரக்கானா ஸ்டேடியத்தில் கோலாகலமாக நடந்தது. கண்கவர் கலை நிகழ்ச்சிகள், ஆட்டம் பாட்டம், வாணவேடிக்கைகள் என்று விழா களை கட்டியது. அணிகளின் அணிவகுப்பில் இந்தியாவுக்கு தலைமை தாங்கிய மாரியப்பன் தேசிய கொடியை ஏந்தி உற்சாகமாக வலம் வந்தார். இறுதியில் பாரா ஒலிம்பிக் கொடியை, 2020-ம் ஆண்டு பாராஒலிம்பிக் நடக்க உள்ள டோக்கியோவுக்காக அதன் கவர்னர் யுரிகோ கோய்கே பெற்றுக் கொண்டார்.

Related Post

ஒலிம்பிக் வீரர் மாரியப்பனுக்கு பத்ம ஸ்ரீ விருது

ஒலிம்பிக் வீரர் மாரியப்பனுக்கு பத்ம ஸ்ரீ விருது

நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய அங்கீகாரமான பத்ம விருதுகள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. பிரேசிலில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில்…