தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியது உண்மைதான் பாகிஸ்தான் அதிகாரிகள் ஒப்புதல்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய ராணுவம் கடந்த 28–ந்தேதி நள்ளிரவு ஊடுருவி மறுநாள் காலை 4.30 மணிவரை பயங்கரவாதிகள் முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகள் 40 பேர் கொல்லப்பட்டதாகவும், பயங்கரவாதிகளின் 7 முகாம்கள் துவம்சம் செய்யப்பட்டதாகவும் ராணுவம் அறிவித்தது.

‘சர்ஜிகல்’ தாக்குதல் என்று இதற்கு இந்திய ராணுவம் பெயர் சூட்டியது. ஆனால் இப்படியொரு தாக்குதல் நடத்தப்படவில்லை என்று பாகிஸ்தான் மறுத்து வருகிறது. காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற எதிர்க்கட்சிகள் இது தொடர்பான ஆதாரங்களை வெளியிடவேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மிர்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி.,யாக இருப்பவர் குலாம் அக்பர். சி.என்.என் நிறுவனத்தை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அந்த பத்திரிக்கையாளர் தன்னை போலீஸ் ஐ.ஜி முஸ்டாக் என எஸ்.பி. குலாம் அக்பரிடம் அறிமுகப்படுத்தினார். அவர் மிர்பூர் மாவட்டத்தில் இந்தியாவின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் என்ன பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என கேட்டார்.

அதற்கு பதில் அளித்த எஸ்.பி., குல்காம், ” செப்.,29 ம் தேதி மிர்பூர் மாவட்டத்தில் நுழைந்த இந்திய ராணுவம் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தியது.அதிகாலை 2 மணி முதல் 5 வரை இந்த தாக்குதல் நடந்தது. 5க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதற்கு நமது (பாகிஸ்தான் ராணுவம்) தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தினோம்.இந்திய வீரர்கள் நடத்திய

தாக்குதலில் 5 பாகிஸ்தான் ராணுவத்தினர் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த வரின் உடல்களை நமது வீரர்கள் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து வந்தனர். அவர்கள் அனைவரின் உடல்களையும் நமது கிராமத்திலேயே புதைத்து விட்டோம்” என்று தொலைபேசியில் விளக்கம் அளித்தார். அவரது உரையாடலில் ஜிகாதி பயங்கரவாதிகள் இந்தியாவிற்கு ஊடுருவ பாகிஸ்தான் உதவி செய்வதையும் ஒப்புக்கொண்டார்.இந்த உரையாடல் தற்போது வெளியாகி உள்ளது.

இதன்மூலம், இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தவில்லை,அவ்வாறு இந்தியா நடத்தியி ருந்தால் வீடியோ ஆதாரம் வெளியிட வேண்டும் என பாக். கேட்டது. இதற்கு ஆதர வாக நமது ராணுவத்தை நம்பாத இந்திய அரசியல்வாதிகள் சிலரும் வீடியோ ஆதாரம் கேட்டனர். இந்த செய்தி வெளியானதன் மூலம் அவர்கள் முகத்தில் கரி பூசப்பட்டது.