ஒலிம்பிக் போட்டி : 103 இந்தியர்கள் தகுதி

ஒலிம்பிக் போட்டி : 103 இந்தியர்கள் தகுதி:-

இதுவரை இல்லாத அளவுக்கு முதன் முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய வீரர், வீராங்கனைகள் மொத்தம் 103 பேர் தேர்வாகியுள்ளனர்.

வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 21ஆம் தேதிவரை பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனிரோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இந்த ஒலிம்பிக் போட்யில் பங்கேற்க இந்தியாவில் இருந்து 103 வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். எந்த ஒரு ஒலிம்பிக் போட்டிக்கும் இவ்வளவு அதிகமான வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றது கிடையாது. 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு 83 பேர் பங்கேற்றதே அதிகமானதாக இருந்தது.

இதை முறியடித்து இந்த ஒலிம்பிக் போட்டிக்கு 103 பேர் இதுவரை தகுதி பெற்று உள்ளனர். இதில் 56 ஆண்கள், 47 பெண்கள். 57 வகையான விளையாட்டு பிரிவில் இந்தியா பங்கேற்கிறது.

தடகளத்தில் 23 பேர் கலந்து கொள்கிறார்கள். இதில் 11 பேர் பெண்கள். 15 பிரிவுகளில் அவர்கள் பங்கேற்கிறார்கள். ஹாக்கியில் இரு அணிகளும் (ஆண்கள், பெண்கள்) கலந்து கொள்கின்றன.

Visit Chennaivision for More Tamil Cinema News