ரூ. 500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு திரும்ப பெறப்படாது வெங்கையா நாயுடு பேச்சு

ரூ. 500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு திரும்ப பெறப்படாது வெங்கையா நாயுடு பேச்சு

பழைய ரூ. 500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெறப்படாது வெங்கையா நாயுடு பேச்சு

பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று மத்திய அரசு கடந்த 8ம் தேதி அறிவித்தது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், திரும்ப பெறக் கோரியும் எதிர்க்கட்சிகள்  கடுமையான போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியதாவது: எந்தவொரு சூழ்நிலையிலும் செல்லாத நோட்டு அறிவிப்பு திரும்ப பெறப்படாது. எதையும் திரும்ப பெறுவது என்பது மோடியின் ரத்தத்திலேயே கிடையாது.

சூழ்நிலையை மேம்படுத்த அரசு தயாராக உள்ளது. இது தொடர்பாக பரிந்துரைகள் இருந்தால் எதிர்க்கட்சிகள் முன்வந்து தெரிவிக்கலாம். மத்திய அரசின் செல்லாத நோட்டு முடிவு அறிவிப்பு புரட்சிகரமானது மற்றும் வரலாற்று சிறப்பு மிக்கது. இந்த முடிவு நாட்டுக்கு சாதகமானது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Post

சென்னை விமான நிலையத்திற்கு ஏற்பட்டுள்ள போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பிரச்சனை…

சென்னை விமான நிலையத்திற்கு ஏற்பட்டுள்ள போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பிரச்சனை…

சென்னை மீனம்பாகத்தில் அமைந்துள்ள சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்கள் மிகவும் போக்குவரத்து நெரிசலான ஜி.எஸ்.டி. சாலையில் அமைந்துள்ளது. இந்த…