2016 தமிழ்நாடு சட்டசபை தேர்தல், வேட்பு மனுதாக்கல் இன்று மாலை முடிவடைந்தது

வேட்பு மனுதாக்கல் இன்று மாலை மூன்று மணியுடன் முடிவடைந்தது

வேட்பு மனுதாக்கல் இன்று மாலை மூன்று மணியுடன் முடிவடைந்தது

தமிழக சட்டசபை தேர்தல் மே மாதம் 16ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மே 22ந்தேதி தொடங்கியது.

பாரதீய ஜனதா கட்சி, அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், திராவிட முன்னேற்ற கழகம், தேசிய முற்போக்கு திராவிட கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேட்சைகள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மே 28 ந்தேதி நிலவரப்படி, 234 தொகுதிகளிலும் 4 ஆயிரத்து 82 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களில் 3 ஆயிரத்து 612 பேர் ஆண்கள். 468 பேர் பெண்கள். 2 பேர் திருநங்கைகள்.

அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் மாற்று வேட்பாளர்கள் பலரும் இன்று வேட்புமனு கொடுத்தனர். இறுதி நாளான இன்று தேர்தல் அதிகாரிகளின் அலுவலகங்களில் கடும் கூட்டம் காணப்பட்டது. சில முக்கிய பிரமுகர்களும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிந்தது.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலினை சனிக்கிழமை நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற மே 2-ந்தேதி கடைசி நாளாகும். அன்று மாலையே 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.

கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் 2748 பேர் போட்டியிட்டனர்.இந்த ஆண்டு வேட்பாளர்கள் எண்ணிக்கை சற்று உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மே 14ந் தேதி மாலையுடன் பிரசாரம் நிறைவு பெறும். மே 16ந்தேதி ஓட்டுப்பதிவு நடத்தப்படும். மே 19ந்தேதி ஓட்டுகள் எண்ணி முடிவுகள் வெளியிடப்படும்.

Visit Chennaivision for More Tamil Cinema News

Similar Tags: தமிழக சட்டசபை தேர்தல் 2016வேட்பு மனுதாக்கல்