உடனடி ராணுவ நடவடிக்கை இருக்காது: மத்திய அரசு

உடனடி ராணுவ நடவடிக்கை இருக்காது: மத்திய அரசு

காஷ்மீரில் ராணுவ படைப்பிடிவு முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த நடவடிக்கைக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுக்க வேண்டும், என்று இந்திய முன்னாள் உயர் ராணுவ அதிகாரிகள் வலியுறுத்தியுள்ள நிலையில், பயங்கரவாதிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கபட மாட்டாது, என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், “அவசரப்பட்டு, உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. முறையான திட்டமிடல், ஒருங்கிணைப்பு, அனைத்து வழிமுறைகளையும் ஆய்வு செய்வது, சம்பந்தப்பட்ட அனைவரின் கருத்துகளையும் கேட்பது ஆகியவற்றுக்கு பிறகே நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டு 18 இந்திய வீரர்களை கொன்ற மணிப்பூர் பயங்கரவாதிகள் மீது கூட ஒரு வாரம் கடந்த பிறகுதான் தாக்குதல் நடத்தினோம். எனவே, இதிலும் அவசர நடவடிக்கை எதுவும் இருக்காது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான டைரக்டர் ஜெனரல் ரன்பீர் சிங், வெளியிட்டுள்ள அறிக்கையில், “எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் நடந்து வரும் பயங்கரவாத சம்பவங்களை அணுகுவதில் இந்திய ராணுவம் பொறுமையை கடைபிடித்து வந்துள்ளது. அதே சமயத்தில், இத்தகைய அப்பட்டமான அத்துமீறல்களுக்கும், வன்முறைகளுக்கும் பதிலடி கொடுக்கக்கூடிய வல்லமை எங்களுக்கு இருக்கிறது.

எதிரிகளின் எத்தகைய செயல்களுக்கும் உரிய நேரத்தில், உரிய இடத்தில் பதிலடி கொடுப்போம். அதை தேர்வு செய்யும் உரிமை எங்களுக்கு இருக்கிறது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது ஊடுருவல் முயற்சிகள் அதிகரித்துள்ளன. காஷ்மீரில் வன்முறையை தூண்டும் நோக்கத்துடனே இவை நடக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.

Related Post

சென்னை விமான நிலையத்திற்கு ஏற்பட்டுள்ள போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பிரச்சனை…

சென்னை விமான நிலையத்திற்கு ஏற்பட்டுள்ள போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பிரச்சனை…

சென்னை மீனம்பாகத்தில் அமைந்துள்ள சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்கள் மிகவும் போக்குவரத்து நெரிசலான ஜி.எஸ்.டி. சாலையில் அமைந்துள்ளது. இந்த…