விவசாயிகள் உயிரிழப்புக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

விவசாயிகள் உயிரிழப்பை அடுத்து தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் அணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நாகை, திருவாரூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருச்சி, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் விவசாயிகள் உயிரிழந்தது எப்படி என விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விவசாயிகள் உயிரிழப்பு குறித்து 6 வாரத்தில் பதிலளிக்க தமிழக தலைமை செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.