சென்னையில் இன்றும் மழை பெய்ய அதிக வாய்ப்பு!

சென்னையில் இன்றும் மழை பெய்ய அதிக வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்றிரவு மொத்தம் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு பெய்த தொடர் மழையால், சென்னையில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சென்னை விமான நிலைய ஓடுபாதையில்  மழை நீர் தேங்கியதன் காரணமாக, டெல்லி, மும்பையில் இருந்து சென்னை வந்த 4 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

மேலும், சென்னையில் இருந்து புறப்பட இருந்த உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கான 20 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.