பழைய ரூ. 500, 1000 நோட்டுகளை வங்கியில் மாற்றிய மோடியின் தாயார்

சுருக்குப் பையில் வைத்திருந்த பழைய 500 ரூபாய் நோட்டுக்களை மாற்ற பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீராபென் (97) நடந்து சென்று வங்கியில் வரிசையில் காத்திருந்து புதிய ரூபாய் நோட்டுகளை வாங்கி சென்றார்.

கருப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை செல்லாது என்று மத்திய அரசு கடந்த 8-ஆம் தேதி இரவு அறிவித்ததையடுத்து, நாடு முழுவதும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது.

பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை நவ.24-ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து மக்கள் தாங்கள் வைத்திருக்கும் பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் வரிசையில் நின்று மாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடியின் தாயார் ஹீரா பென்(97) குஜராத்தின் காந்திநகரில் உள்ள வங்கி ஒன்றிற்கு சென்று, தான் வைத்திருந்த 500 ரூபாய் நோட்டுக்களை மாற்றினார். அவரது வருகையை அறிந்த செய்தியாளர்கள் வங்கி முன்பு திரண்டனர்.

ஹீராபென்னிடம் விண்ணப்பம் ஏற்கனவே பெறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

More