செல்வாக்கான நபர் பட்டியலில் இந்த ஆண்டு பிரதமர் மோடி முதலிடம்!

2016-ம் ஆண்டின் செல்வாக்கான நபர் யார்? என டைம் பத்திரிக்கை நடத்தி வரும் கருத்துக்கணிப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் நீடித்து வருகிறார்.

அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பிரசித்தி பெற்ற இதழான டைம் 2016-ம் ஆண்டுக்கான செல்வாக்கான நபரை தேர்ந்தெடுக்கும் வகையில் கருத்துக்கணிப்பொன்றை நடத்தி வருகிறது.

இணைய வழியாக வாசகர்கள் வாக்களித்து வரும் இந்த கருத்துக்கணிப்பில் 21% வாக்குகளுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் நீடித்து வருகிறார். மோடிக்கு அடுத்த இடத்தில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ஜே 10 சதவீத வாக்குகள் பெற்று இரண்டாமிடத்தில் உள்ளார்.

இதில் ஆரம்ப கட்ட நிலவரமாக இந்திய பிரதமர் மோடிக்கு ஆதரவாக 21 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே 10 சதவீத வாக்குகள் பெற்று 2வது இடத்தில் உள்ளார்.

இந்த ஆண்டின் செல்வாக்கு மிக்கவர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் மோடி முதலிடத்தில் நீடித்து வருகிறார். அமெரிக்க இதழான டைம், நடப்பாண்டிற்கான செல்வாக்கான நபரை தேர்ந்தெடுக்கும் வகையில் கருத்துக்கணிப்பை நடத்தி வருகிறது. இந்த கருத்துக்கணிப்பில் இணையம் வழியாக வாசகர்கள் வாக்களித்து வருகின்றனர். தற்போதிய நிலவரப்படி  21% வாக்குகளுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் நீடித்து வருகிறார். மோடிக்கு அடுத்த இடத்தில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ஜே 10 சதவீத வாக்குகள் பெற்று இரண்டாமிடத்தில் உள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா 7 சதவீத வாக்குகளுடன் 3-வது இடத்திலும், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட ட்ரம்ப் ஆகியோர் தலா 6 சதவீத வாக்குகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர். இந்த கருத்துக்கணிப்பின் இறுதி முடிவுகளை டைம் பத்திரிக்கை டிசம்பர் 4-ம் தேதி வெளியிடும்.

கடந்த 2014ம் ஆண்டு இதே டைம் பத்திரிகை நடத்திய இதே கருத்து கணிப்பில் பிரதமர் மோடி அந்த ஆண்டுக்கான மனிதராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.