மேகாலயாவில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த எம்.எல்.ஏ கைது

மேகாலயாவில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து தலைமறைவாகி இருந்த சுயேட்சை எம்.எல்.ஏ., கவுஹாத்தியில் கைது செய்யப்பட்டார்.

மேகலாயாவில் சுயேட்சை எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் ஜூலியஸ் கே தோர்பாங்க். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில், இவர் தலைமறைவானார். இவர் பற்றிய தகவல்களைக் கொடுக்குமாறு, பக்கத்து மாநிலமான அஸ்ஸாமுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இவர், இன்று காலை குவஹாத்தியில் கைது செய்யப்பட்டார்.

தீவிரவாத அமைப்பு ஒன்றை உருவாக்கிய குற்றத்தின் கீழ் கடந்த 2009 ஆம் ஆண்டில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்தான் இந்த சுயேட்சை எம்.எல்.ஏ.,. மேகலாயா காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் லிங்க்டோவுக்குச் சொந்தமான விருந்தினர் மாளிகையில்தான் இந்த பாலியல் பலாத்காரம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த குற்றச்சாட்டின் கீழ் போலீசார் சோதனை மேற்கொண்டு முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தனர்.