என்னை புகழ்ந்து பேசுவதை விரும்பவில்லை: மு.க.ஸ்டாலின்

திருமண விழாக்களில் என்னை புகழ்ந்து பேசுவதை நான் விரும்பவில்லை, என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

நடிகரும், திமுக பிரமுகருமான வாகை சந்திரசேகரனின் மகள் திருமணம் இன்று பழனியில் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்திய மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

இந்த திருமணத்தை சென்னையில் நடத்தாமல் பழனியில் நடத்தியதற்காக நான் வாகை சந்திரசேகருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஏனெனில் சென்னையில் நடத்தி இருந்தால் தி.மு.க. தலைவர் கருணாநிதி பங்கேற்க வேண்டி இருக்கும். அவருடைய உடல் நலத்தை கருத்தில் கொண்டுதான் சென்னையில் நடத்தாமல் பழனியில் அவர் நடத்தி இருக்கிறார்.

இருந்தபோதும் தி.மு.க. தலைவர் கருணாநிதி அனுப்பி உள்ள வாழ்த்து கடிதத்தை அவரிடம் நான் வழங்கியுள்ளேன். திருமண விழாக்களில் என்னை புகழ்ந்து பேசுவதை நான் விரும்பவில்லை. அதனால்தான் மணமக்களை மட்டும் வாழ்த்தி பேசுமாறு தி.மு.க. நிர்வாகிகளிடம் கூறினேன். மணமக்கள் 16 வகை செல்வங்களையும் பெற்று நலமுடன் வாழ வேண்டும்.