தீபாவளி அன்று பெப்பர்ஸ் டிவியில் மிஸ் செளத் இந்தியா ‘மீரா மிதுன்’

பெப்பர்ஸ் டிவி யில் தீபாவளியன்று பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

காலை 8.00 மணிக்கு ஒளிபரப்பாகும் இசை சங்கமம் நிகழ்ச்சியில், பிரபல கர்நாடக இசை கலைஞர்கள் புல்லாங்குழல் இசை கலைஞர் கலைமாமணி திருவாரூர் சுவாமிநாதன் மற்றும் குழுவினர்கள் பங்கு பெறுகிறார்கள்.

பெண்களின் சுதந்திரம் வளர்கிறதா? தளர்கிறதா? என்ற தலைப்பில் காலை 9.30 மணிக்கு சிறப்பு பட்டிமன்றம் நிகழ்ச்சி ஒளிபரப்பபடுகிறது.

திருச்சி காவேரி பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற இந்த பட்டிமன்றத்தில், புலவர் ராமலிங்கம் தலைமையில் கல்லூரி மாணவிகளின் கலக்கலான, சுவையான, அறிவுப்பூர்வமான பேச்சின் மூலம், மக்களை சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கின்றனர்.

மாலை 6.00 மணிக்கு பிரபல மாடலிங் பெண் மிஸ் செளத் இந்தியா 2016 பட்டம் வென்ற மீரா மிதுன், தனது வாழ்க்கையில் எதிர்க்கொண்ட பிரச்சினைகள், கைப்பற்றிய வெற்றிகள் ஆகியவை குறித்து மனம் திறப்பதுடன், மாடலிங் துறையில் உள்ள சூட்சமங்கள் குறித்தும் வெளிப்படையாக பேசுகிறார்.