உதய் மின் திட்டத்தில் சேர தமிழ அரசு ஒப்புதல்: பியூஸ் கோயல்

தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, இன்று திடீரென டில்லி சென்றார், அங்கு மத்திய மின்துறை மந்திரி பியூஸ் கோயலை சந்தித்து பேசினார்.

மத்திய அரசின் உதய் திட்டத்தில் தமிழகம் சேர்வது குறித்து  இருவரும் விவாதிக்க கூறப்படுகிறது. உதய் திட்டத்திற்கு தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது.தற்போது இந்த திட்டத்தில் சேர முன் வந்து உள்ளது. இது குறித்து கூறிய பியூஸ் கோயல் உதய் மின் திட்டத்தில் சேர தமிழ அரசு முன் வந்துள்ளது. இந்த திட்டத்தில் சில நிபந்தனைகளை தமிழகம் விதித்து  உள்ளதாகவும் தெரிவித்தார்.

அப்போது, எரிசக்தி திட்டத்திற்கு மாநில அரசு செய்த ரூ.150 கோடி செலவிற்கு மானியம் தேவை. காலாண்டிற்கு ஒரு முறை மின்கட்டணத்தை திருத்த மாநில அரசுக்கு உரிமை வேண்டும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பிற மாநிலங்களுக்கு தர நடவடிக்கை எடுக்க ஏற்படுத்த வேண்டும் எனக்கூறினார். பின்னர், பியூஸ் கோயல், உதய் மின் திட்டத்தில் சேர தமிழக அரசு முன் வந்துள்ளது. உதய் மின் திட்டத்தில் சேர தமிழகம் பல நிபந்தனைகளை விதித்துள்ளது. இரு தரப்பும் பேசி ஒரு முடிவுக்கு வந்துள்ளோம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது.