பாகிஸ்தானில் பெண் எம்.பி-க்கு பாலியல் தொல்லை கொடுத்த அமைச்சர்

பாகிஸ்தான் நாட்டில் பெண் எம்.பி ஒருவருக்கு அந்நாட்டு அமைச்சர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாராளுமன்றத்தில் சிந்த் மாகாண எம்.பி யாகவும், சட்ட வல்லுநராகவும் இருப்பவர் நுஷ்ரத் சஹார் அப்பாசி. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மாகாண அமைச்சர் இம்தாத் பிடாபி தனது அறைக்கு தன்னை அழைத்ததாகவும், அங்கு சென்றதும் பாலியல் ரீதியிலான கருத்துக்களை தெரிவித்து தொந்தரவு அளித்ததாகவும் நுஷ்ரத் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும், அமைச்சரின் இத்தகைய செயலை நுஷ்ரத், பாராளுமன்றத்தில் தெரிவித்த போதிலும், துணை சபாநாயகர் அவர் மீது நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும், நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தான் தற்கொலை செய்து கொள்வேன், என்றும் அவர் கூறினார்.

பிரச்சினை விவரீபமானதால், கட்சியின் தலைமை அமைச்சரை மன்னிப்பு கேட்குமாறு நிர்பந்தம் செய்ததால், அவர் நுஷ்ரத்திட மன்னிப்பு கேட்டார்.