ரூ. 500, 1000 செல்லாது என்ற அறிவிப்பு நாட்டின் பொருளாதாரத்தை குறைக்கும்: மன்மோகன் சிங் பேச்சு

மாநிலங்களவையில் ரூபாய் நோட்டு பிரச்சினை குறித்து விவாதம் தொடங்கியது. எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவையில் நடைபெறும் விவாதத்தில் பங்கேற்றுள்ளார். மேலும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ப.சிதம்பரம் ஆகியோரும் விவாதத்தில் பங்கேற்க மாநிலங்களைவைக்கு வந்துள்ளனர்.

ரூபாய் நோட்டு விவாதத்தை மாநிலங்களவையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்து பேசினார். அப்போது பேசிய மன்மோகன் சிங் 500, 1000 ரூபாய் செல்லாது என்ற மோடி அறிவிப்பால் ஏற்பட்ட பிரச்சினையை விவாதிக்க வந்துள்ளதாக மாநிலங்களவைக்கு வந்துள்ளதாக தெரிவித்த அவர், ரூபாய் நோட்டு பிரச்சினையால் நாட்டில் மாபெரும் நிர்வாக குளறுபடி ஏற்பட்டுள்ளது என்று மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் நிர்வாக தோல்வியால் ரூபாய் நோட்டு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் பேசிய மன்மோகன் சிங் தெரிவித்தார். அரசு அறிவிப்பால் ஏற்படப்போகும் இறுதி விளைவு என்வென்று தெரியாது என்று தெரிவித்த அவர், 50 நாட்கள் துன்பத்தை அனுபவித்தால் மக்களுக்கு பேரழிவு வந்து சேரும் என்று அவர் தெரிவித்தார். மோடி சொன்னது போல் 50 நாட்கள் மக்கள் துன்பத்தை அனுபவிக்க முடியாது என்றும், அரசின் இந்த நடவடிக்கையால் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 2 சதவீதம் குறையும் என அவர் தெரிவித்தார்.

500, 1000 செல்லாது என்ற திட்டத்தை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்த யோசனை கூற வேண்டும் என்றும், நாட்டில் பணத்தட்டுப்பாட்டால் வங்கி, ஏடிஎம் வரிசையில் நின்று 65 பேர் உயிரிழந்ததை மன்மோகன் சிங் சுட்டிக்காட்டினார். ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால் வேளாண்மை, சிறு தொழில்கள் பெருமளவு பாதிக்கப்படும் என்றும், அரசு நடவடிக்கையால் அமைப்பு சாரா தொழில்கள் முடங்கிவிடும் என்றும் ரூபாய் நோட்டு பிரச்சினை விவாதத்தில் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

அரசின் இந்த நடவடிக்கையால் செலவாணி முறையிலும், வங்கிகள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை போய்விடும் என்று தெரிவித்த மன்மோகன் சிங், வங்கிகள் பணம் போட்ட பணத்தை மக்களால் திரும்ப பெற முடியவில்லை என்று குற்றம் சாட்டினார். ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு விவசாயத்தை மிகவும் பாதிக்கும் என்றும், தினமும் வங்கிகள் ஒரு விதியை சொல்வது சரியல்ல என்றும் மன்மோகன் சிங் தெரிவித்தார். நடைமுறைக்கு சாத்தியமான திட்டத்தை அறிவிக்குமாறு பிரதமரை கேட்டுக்கொள்வதாக மன்மோகன் சிங் தெரிவித்தார்.