கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி

சென்னை வடபழனி அருகே மனைவியின் துணையுடன் கணவரை கொலை செய்த கள்ளக் காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

வடபழனி பகுதியிலும் ரோந்து பணிகளை போலீ சார் முடுக்கி விட்டுள்ளனர். வடபழனி முருகன் கோவில் பின்புறம் உள்ள பக்தவச்சலம் காலனி பகுதியில் நேற்று இரவு,போலீஸ் ஏட்டுகள் சங்கர், பாலகிருஷ்ணன், போலீஸ்காரர் சமுத்திரவேல் ஆகியோர் இன்று அதிகாலை 3 மணி அளவில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது, அந்த வழியாக கையில் பையுடன் வாலிபர் ஒருவர் சென்று கொண்டிருந்தார்.

அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது திடீரென அந்த வாலிபர் ஓட்டம் பிடித்தார். இதையடுத்து போலீசார் அவரை விரட்டிச்சென்று மடக்கி பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனை போட்டனர். அதில் சிறிய கத்தி , 2 செல்போன்கள், ஒரு ஐ பேட், மற்றும் ரத்தகரை படிந்த  டி.சர்ட் ஒன்றும் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், அதுபற்றி கேட்டனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர், அருகில் உள்ள ஒரு வீட்டில் ஒருவரை கொலை செய்து விட்டு வருகிறேன் என்று கூறி பெரிய குண்டை தூக்கி போட்டார். இதனை கேட்டு போலீசார் ஆடிப்போய் விட்டார்கள்.எந்த வீட்டில் யாரை கொலை செய்தாய்? அடையாளம் காட்டு என்று கூறிய போலீசார் அந்த வாலிபரை அழைத்துச் சென் றனர். அப்போது அவர், பக்தவச்சலம் காலனி 2-வது தெருவில் அடுக்கு மாடி  குடியிருப்பில் முதல் மாடிக்கு சென்றார். அங்கு ஒரு வீட்டின் கதவு திறந்து கிடந்தது.

போலீசார் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அவர்கள் கண்ட காட்சி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்கே 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். கழுத்தை அறுத்து அவர் கொலை செய்யப் பட்டிருந்தார். வீட்டின் இன்னொரு அறையில் முகமும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் மயங்கிய படி பெண் ஒருவர் படுத்திருந்தார். போலீசில் பிடிபட்ட வாலிபர், ரத்த வெள்ளத்தில் கிடந்தவரின் உடலை காட்டி, இவரைத் தான் நான் கொலை செய்தேன் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவரின் பெயர் கோபால கிருஷ்ணன்(35) என்பதும், மயங்கிய நிலையில் கிடந்தது அவரது மனைவி பாரதி (28) என்பதும் தெரியவந்தது.கோபால கிருஷ்ணனை கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற போது தான் வாலிபர் கத்தியுடன் சிக்கி யுள்ளார்.

வாலிபரின் பெயர் ரெவிங்டன் கார்த்திக் லியோ என்பதும் எம்.பி.ஏ   பட்ட தாரியான இவர், கொலையுண்ட கோபால கிருஷ்ணனின் மனைவி பாரதியை காதலித்து வந்திருப்பதும் தெரியவந்தது. இது தொடர் பாக ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே பாரதியும் கார்த்திக் லியோவும் சேர்ந்து திட்டம் போட்டு கோபால கிருஷ்ணனை கொலை செய்திருப்பது அம்பலமானது.

பாரதி பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்து விட்டு மயிலாப்பூரில் உள்ள புத்தக வடிவமைப்பு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. கணவன் -மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் பாரதி, குழந்தையை திருவண்ணாமலை அருகே உள்ள புரகம்பட்டு கிராமத்தில்  தனது தாய் வீட்டில் விட் டிருந்தனர். தினமும் காலையில் வேலைக்கு செல்லும் போது, பாரதியை கோபால கிருஷ்ணன் மோட்டார் கைக்கிளில் அழைத்துச்செல்வார். மாலையில் அவரே வீட்டுக்கும் அழைத்து வருவார். சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இவர்களது குடும்ப வாழ்வில் கடந்த ஓராண்டுக்கு முன்னர் தான் கள்ளக்காதல் ரூபத்தில் புயல் வீசத்தொடங்கியது.

பாரதி பணிபுரிந்த அலுவலகத்தில் ஓராண்டு முன்னர் பணியில் சேர்ந்த கார்த்திக் லியோவும்  பாரதியும் காதலிக்க தொடங்கினார்.இருவரும் பல இடங்களுக்கு வெளியிலும் சென்றுள்ளனர்.இது கோபாலகிருஷ்ணனுக்கு தெரிய வந்தது.

இதனால் மனைவி பாரதியை கண்டித்தார். இருவருக்கும்  இடையே இது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.இது பற்றி பாரதி, கள்ளக்காதலனான கார்த்திக் லியோவிடம் கூறினார். இதனை தொடர்ந்து 2 பேரும் கோபாலகிருஷ்ணனை கொலை செய்ய திட்டம் போட்டனர். இதன்படி நேற்று நள்ளிரவில் பாரதி, காதலன் கார்த்திக் லியோவை வீட்டுக்கு வரவழைத்து, அவர் மூலமாக கணவரை தீர்த்துக்கட்டியுள்ளார்.

நள்ளிரவு 2 மணி அளவில் பாரதியின் வீட்டுக்கு சென்ற கார்த்திக் லியோ, கோபாலகிருஷ்ணனை கொலை செய்து விட்டு 3 மணி அளவில் வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது தான் ரோந்து போலீசாரிடம் அவர் மாட்டிக் கொண்டார்.

இதையடுத்து கார்த்திக் லியோவை கைது செய்த போலீசார் வடபழனி போலீஸ் நிலையத்தில் வைத்து இன்று காலை விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையுண்ட கோபால கிருஷ்ணனின் உடல் ராயப் பேட்டைஅரசு ஆஸ்பத் திரியில் வைக்கப் பட் டுள்ளது. மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட பாரதி கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இன்று காலையில் 10 மணிக்கு பின்னர் தான் அவருக்கு நினைவு திரும்பியது.

பாரதியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கள்ள காதல் விவகாரத்தில் கணவர் கொலைசெய்யப்பட்ட நிலையில் மனைவியும் சிறைக்கு செல்கிறார்.