ரஜினிகாந்தின் வீட்டில் மலேசிய பிரதமர்

5 நாட்கள் அரசு சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ள மலேசிய நாட்டு பிரதமர் முகமது நஜீப், இன்று ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு சென்று சந்திக்கிறார்.

நேற்று சென்னை வந்த மலேசிய பிரதமர் முகமது நஜீப் மற்றும் அவரது மனைவி ரோஸ்மா மன்சூர், முதல் கட்டமாக இரண்டு நாட்களுக்கு சென்னையில் தங்குகிறார்கள். இங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள அவர்கள், நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் இல்லத்தில் இன்று காலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்ற போது, ரஜினிகாந்தை சந்தித்து பேசிய மலேசிய பிரதமர், அந்நாட்டின் விளம்பர தூதராக ரஜினிகாந்தை நியமிக்க விருப்பம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.