திருப்பனந்தாள் காசி மடம் இணை அதிபர் உடல் அடக்கம்

திருப்பனந்தாள் காசி மடத்தின் இணை அதிபர் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமி நேற்று முன்தி னம் இரவு முக்தி அடைந்தார். இதையடுத்து, நேற்று சம்பிரதாய முறைப்படி அபிஷேகம் நடைபெற்று, குருமூர்த்தத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

திருப்பனந்தாளில் உள்ள புகழ்பெற்ற காசி மடத்தின் அதிப ராக முத்துக்குமார சுவாமி தம்பிரான் இருந்து வருகிறார். கடந்த 2009 மார்ச் மாதம் சுந்தர மூர்த்தி தம்பிரான் சுவாமி(64) காசி மடத்தின் இணை அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு இணை அதிபர் உணவு அருந்திக்கொண்டு இருந்தபோது, நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார். மயக்கமான அவரை பரிசோதித்த டாக்டர், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

நேற்று அவரது உடல் அலங் கரிக்கப்பட்ட பல்லக்கில் ஊர்வல மாக எடுத்துச் செல்லப்பட்டு, குருமூர்த்தம் என்ற இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஊர் வலத்தில் திருப்பனந்தாள் மட அதிபர் முத்துக்குமாரசாமி தம்பி ரான், தருமபுர ஆதீனம் தம்பி ரான் சுவாமி, குமாரசாமி தம்பி ரான், திருஞானசம்பந்த தம்பி ரான், மாணிக்கவாசக தம்பிரான், திருநாவுக்கரசு தம்பிரான், திருவா வடுதுறை ஆதீனம் அம்பலவாணன் தம்பிரான், சுவாமிநாத தம்பிரான், காமாட்சிபுரி ஆதீனம், செங்கோல் ஆதீன குருமகா சன்னிதானம் மற்றும் ஊர் பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்துகொண்டனர்.

இறப்பில் மர்மம் என போலீஸில் புகார்

திருப்பனந்தாளைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ.எஸ்.கரிகாலன் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் நேற்று ஒரு புகார் அளித்துள்ளார். அதில், “மடத்தில் அதிகார பகிர்வினால் ஏற்பட்ட மோதலில், சுவாமியை விஷம் வைத்து கொன்றிருக்கலாம். எனவே, அவரது உடலை உடற்கூராய்வு செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.