அஞ்சலி செலுத்த வந்த இடத்தில் செல்பி எடுத்த கருணாஸ்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நேற்று மாலை மெரினா கடற்கரை ஓரம் அடக்கம் செய்யப்பட்டது.

அவரது இறுதிச் சடங்கில் அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ-கள் என்று ஏராளமான அதிமுக பிரமுகர் பங்கேற்றார்கள். இதில் நடிகரும், எம்.எல்.ஏ-வுமான கருணாஸும் ஒருவர்.

நேற்று ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற கருணாஸிடம், ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க விரும்பியுள்ளார். அதற்கு கருணாஸ், எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல், அவருடன் செல்பி எடுத்துக் கொண்டார். அதுவும், பற்கள் தெரியும் அளவுக்கு சிறித்தபடியே. தற்போது, அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

முதல்வரின் மறைவால் தமிழகமே துக்கத்தில் இருக்க, அதிமுக எம்.எல்.ஏ-வான கருணாஸ் இப்படி சிரித்துக்கொண்டு, அதுவும் ஜெ.வின் உடல் அருகேயே போட்டோவுக்கு போஸ் கொடுத்திருப்பது, அதிமுக தொண்டர்களை மட்டும் இன்றி தமிழக மக்களையே கொதிப்படையச் செய்திருக்கிறது. இதனால் பலர் கருணாஸின் இந்த செல்பிக்கு பெரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

நேற்று சிரித்த கருணாஸ், இந்த செல்பிக்கு எதிராக எழுந்த கருத்துக்களாலும், கண்டனங்களாலும், தற்போது அழுதுக்கொண்டிருக்கிறார்.