தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கடையில் பச்சரிசி, சர்க்கரை, பருப்பு வழங்க திட்டம்: காமராஜ்

தீபாவளி பண்டிகைக்கு முன்பாக ரேஷன் கடைகளில் பச்சரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகியவை விநியோகம் செய்யப் படும் என அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார். மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கான கலந் தாய்வுக் கூட்டம், அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் பேசியதாவது:

தீபாவளிப் பண்டிகை, வடகிழக்கு பருவமழை காலங் களில் தேவைப்படும் அத்தியா வசியப் பொருட்கள், நியாய விலைக் கடைகளுக்கு உடனுக் குடன் அனுப்பப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மத்திய அரசு சிறப்பு விநியோகத் திட்டத்துக்கான மானி யத்தை கடந்த 2012-ல் நிறுத்தியபோதும், தமிழக அரசே மானியத்தை ஏற்றுக்கொண்டு துவரம் பருப்பு, உளுந்து மற்றும் பாமாயில் வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வரு கிறது. பச்சரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள் கடைகளுக்கு அனுப்பப்பட்டு தீபாவளிக்கு முன்பாக விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பருவமழை காலங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் முன்னு ரிமை அடிப்படையில் வழங்க வேண்டும். அதற்கேற்ற வகையில் அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளில் போதுமான பொருட்கள் இருப்பில் வைக்கப் படும். பொதுவிநியோகத் திட்டத்தில் குறைபாடுகள் இருந்தால் 044-28592828, 9445190660, 9445190661, 9445190662 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொருட்கள் சீராக விநியோகிக்கப்படுவதை கண்காணிக்க சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய குடும்ப அட்டைகள் வேண்டி விண்ணப்பிப்பவர் களுக்கு 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. இது வரை 17 லட்சத்து 22 ஆயிரத்து 781 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 5 லட்சத்து 12 ஆயிரத்து 977 போலி அட்டைகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளன. விலைக் கட்டுப்பாடு நடவடிக்கைகளால் தற்போது அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது.

இந்தக் கூட்டத்தில் உணவுத் துறை செயலாளர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக இயக்குநர் கே.கோபால், உணவுப்பொருள் குற்ற புலனாய் வுத்துறை டிஜிபி கே.ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதிய குடும்ப அட்டைகள் வேண்டி விண்ணப்பிப்பவர் களுக்கு 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. இது வரை 17 லட்சத்து 22 ஆயிரத்து 781 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 5 லட்சத்து 12 ஆயிரத்து 977 போலி அட்டைகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளன.