ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பதால் ஏன் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: கமல்ஹாசன்

காலில் அடிபட்டு தற்போது மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு தனது வீட்டில் ஓய்வு எடுத்து வரும் நடிகர் கமல்ஹாசன், விரைவில் ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்.

இதற்கிடையில், அடுத்த மாதம் (நவம்பர் 7) அவரது பிறந்தநாளை விமர்சியாக கொண்டாட அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், முதல்வெ ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம், என்று கமல்ஹாசன் அவர்களது ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”நற்பணி இயக்க தோழர்களுக்கு கோரிக்கை. தமிழக முதல்வர் உடல்நலம் இவ்வாறு இருக்க, என் பிறந்தநாள் விழாக்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.