’கலக்க போவது யாரு 5’ நிகழ்ச்சியில் மீண்டும் சிவகார்த்திகேயன்

தமிழ் தொலைக்காட்சியில் மிக பிரபலமான நகைச்சுவை நிகழ்ச்சி கலக்க போவது யாரு-5. இதன் மாபெரும் இறுதிசுற்று நெருங்கி வரும் நிலையில். முதன் முறையாக கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் இறுதி சுற்று 5000 மக்களுக்கு முன் அரங்கேறவிருக்கிறது.  ரசிகர்களுக்கு இந்நிகழ்ச்சியை நேரில் கண்டு மகிழ இது ஒரு அரிய வாய்ப்பாக அமையும், திருச்சியில் உள்ள  கேர் காலேஜில் வரும் ஜூன் 11 ஆம் நாள் மாலை 6 மணி முதல் நடைப்பெறவுள்ளது. இறுதிப் போட்டியை காண விரும்பும்  ரசிகர்கள் திருச்சியில் உள்ள சென்னை சில்க்ஸ், ராம்ராஜ் காட்டன் மற்றும் பொம்மீஸ் நைடீஸ் ஆகிய ஷோரூம்களில் பெற்றுக் கொள்ளலாம்.

போட்டியாளராய் அறிமுகமாகி டைட்டில் வென்று, வேறு பல நிகழ்ச்சிகளில் தொகுப்பளராக பங்கேற்று , திரையுலகில் இன்று வெற்றிகரமான நடிகராக வலம் வரும் நடிகர் சிவ கார்த்திகேயன் அவர்கள் தன் சொந்த மண்ணில் நடைபெறும் கலக்க போவது யாரு 5 மாபெரும் இறுதிப் போட்டி நிகழ்ச்சியை நேரில் நேரில் கண்டு மகிழ வருகிறார். மேலும், வெள்ளிதிரையின் நகைச்சுவை மன்னர்கள் பலரின் முன் அரங்கேறவிருக்கிறது.

’கலக்க போவது யாரு 5’ நிகழ்ச்சியில் மீண்டும் சிவகார்த்திகேயன்

’கலக்க போவது யாரு 5’ நிகழ்ச்சியில் மீண்டும் சிவகார்த்திகேயன்

கடந்த ஒரு வருடமாக விடா முயற்சியுடன் புது புது கான்சப்டுகளுடன் நடுவர்களையும் ரசிகர்களையும் மகிழ்வித்த போட்டியாளர்களில் இறுதிப்போட்டிக்கு தேர்வானவர்கள் – ‘அறந்தாங்கி’ நிஷா, முல்லை, கோதந்டம், நவீன், சதீஷ், தீனா மற்றும் முகமது குரேஷி ஆவார். மேலும் பல போட்டியாளர்கள் நகைச்சுவை விருந்தளித்து  உங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்க வருகின்றனர்.

இந்த சீசனில் நடுவர்களாக நகைச்சுவை நடிகர் பாலாஜி, ‘மிமிக்ரி’ சேது, தொகுபாளர் மகேஷ் அவர்களுடன் தொகுபாளினி பிரியங்கா, மற்றும் மைனா என்கிற நந்தினி கேப்டன்களாக பங்கேற்றன்ர். ரக்ஷன் மற்றும் ஜாக்குலின் தொகுபாளர்ககளாக மட்டும் அல்லாமல் போட்டியாளர்களுடன் சேர்ந்து நம்மை மகிழ்வித்தனர். இந்த முறையும் இறுதிப் போட்டியில் நேரடியாக நம்மை மகிழ்விக்க வருகின்றனர். இந்த இறுதி சுற்று நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்குள் இரண்டு சுற்றுகள்  நடைபெறவுள்ளது.

Visit Chennaivision for More Tamil Cinema News