கலைஞர் கருணாநிதி இன்று வீடு திரும்புகிறார்

கலைஞர் கருணாநிதி இன்று வீடு திரும்புகிறார்

காவேரி மருத்துவமனையில் இருந்து திமுக தலைவர் கருணாநிதி வெள்ளிக்கிழமை வீடு திரும்புவார் என்று மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி கூறினார்.

சுவாசிப்பதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் டிசம்பர் 15-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். சுவாசத்தை இலகுவாக்கும் டிரக்யாஸ்டமி சிகிச்சையுடன், நோய் எதிர்ப்புச் சக்திக்கான மருந்துகளும் அளிக்கப்பட்டன. இதனால், கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கருணாநிதி நாற்காலியில் அமர்ந்து தொலைக்காட்சி பார்க்கும் படத்தை காவேரி மருத்துவமனை புதன்கிழமை வெளியிட்டது.

இன்று வீடு திரும்புகிறார்: இதைத் தொடர்ந்து “”திமுக தலைவர் கருணாநிதி வெள்ளிக்கிழமை வீடு திரும்புவார்” என்று காவேரி மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் கனிமொழி கூறினார்.

இந்த நிலையில், புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி உள்பட பலர் கருணாநிதியின் நலன் தொடர்பாக வியாழக்கிழமை விசாரித்தனர்.

Related Post

சென்னை விமான நிலையத்திற்கு ஏற்பட்டுள்ள போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பிரச்சனை…

சென்னை விமான நிலையத்திற்கு ஏற்பட்டுள்ள போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பிரச்சனை…

சென்னை மீனம்பாகத்தில் அமைந்துள்ள சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்கள் மிகவும் போக்குவரத்து நெரிசலான ஜி.எஸ்.டி. சாலையில் அமைந்துள்ளது. இந்த…