முதல் அமைச்சர் ஜெயலலிதாவை நலம் விசாரித்த நடிகை விஜயசாந்தி

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க, மலேசிய நாட்டு கல்வி அமைச்சர் கமலநாதன், அகில இந்திய மகிளா காங்கிரஸ் கட்சியின் தேசிய ெபாது செயலாளர் நடிகை நக்மா மற்றும் விஜயசாந்தி ஆகியோர் நேற்று அப்போலோ மருத்துவமனைக்கு வந்தனர்.

முதல்வர் ெஜயலலிதாவுக்கு அப்போலா மருத்துவமனையில் 44வது நாளாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று  மலேசிய நாட்டு கல்விஅமைச்சர் கமலநாதன், நடிகைகள் நக்மா, மற்றும் விஜயசாந்தி ஆகியோரும் வந்தனர். நாடாளுமன்ற துணை சபாநாயகர் மற்றும் டாக்டர்களை சந்தித்து முதல்வரின் உடல்நிலை பற்றி கேட்டறிந்தனர்.

பின்னர், வெளியே வந்த கல்வி அமைச்சர் கமலநாதன் கூறுகையில், ‘‘முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரிக்க வந்தேன். மருத்துவர் எனக்கு விரிவாக விளக்கி கூறினார். முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் நன்றாக இருப்பதாகவும் விரைவில் வீடு திரும்பும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றும் கூறினார்’’ என்றார்.

நடிகைகள் நக்மா, விஜயசாந்தி ஆகியோரும் வந்தனர். விஜயசாந்தி கூறுகையில், ‘முதல்வர் ஜெயலலிதா நன்றாக இருப்பதாக டாக்டர்கள் கூறினர். தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் கவலைப்பட தேவையில்லை. விரைவில் வீடு திரும்புவார்’ என்றார்.