ஜல்லிக்கட்டு விவகாரம் வேலூரில் இன்று பிரம்மாண்ட பேரணி

வேலூர் ஜல்லிக்கட்டுக்கு விழாவுக்கு அனுமதி அளிக்க வலியுறுத்தி காட்பாடியில் எருது விடும் பாதுகாப்புச் சங்கத்தினர் கருப்புச் சின்னம் அணிந்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனர்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கப்படாவிடில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதோடு, பொங்கலை கருப்புத் தினமாக அனுசரிக்கப் போவதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் தெரிவித்தனர்.

இதில் சங்க நிர்வாகிகள் முரளி, முருகன், ஞானசேகரன், பால்ராஜ், உறுப்பினர்கள், காளை உரிமையாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்

வேலூர் மாவட்டத்தில் பேரணி நடத்திவருகின்றனர் போராட்டத்தில் பொது மக்களிடையே தள்ளு முள்ளு நடந்து வருகின்றது. இப்போராட்டம் மக்களிடையேயும், மாணவர்களிடையேயும் தீவிரமாவதால் மத்திய மாநில அரசு ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.