இட்ஸ் ஆல் அபவுட் லவ் குறும்படம் முன்னோட்டம்

கற்பிதா வர்ச்சுவல் ரியாலிட்டி ஸ்டுடியோ பிரைவெட் லிமிடெட் அஷ்வத்தாமன் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள குறுப்படம் இட்ஸ் ஆல் அபவுட் லவ்.

இக்குறும்படத்தின் திரைக்கதை ப்ரவீன் சந்தர் எழுத எஸ்.எஸ்.தளபதி மற்றும் ப்ரஷாந்த் மோண்ட்டி இயக்கியுள்ளனர். இக்குறும்படத்தில் ஷைலஜா சேட்லூர், அஷோகன் V.S, ஶ்ரீஜித், பவித்ரா நாயர், டேவிட் அஷ்வத்தாமன், சூர்யா கணபதி ஆகியோர் நடித்துள்ளனர். இக்குறும்படத்திற்கு இசை – தென்மா, ஒளிப்பதிவாளர் – எஸ்.எஸ்.தளபதி, படத்தொகுப்பாளர் – ப்ரஷாந்த் மோண்ட்டி

ஆறு பேர்… மூன்று கதைகள்… ஒரு பிரச்சினை… காதல்…

மூன்று வெவ்வேறு வயதினர்களின் காதல், அந்த காதலில் ஏற்படும் பிரச்சனைகள், அந்த பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வு காணப்படுகிறது என்பதை நவீன காலத்திற்கேற்ப கூறியிருக்கும் குறும்படம்தான் இட்ஸ் ஆல் அபவுட் லவ்.