கோவை கல்லூரி மாணவர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பா? காவல்துறையினர் விசாரணை

உரி பகுதியில் ராணுவ தலைமையகம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரர்கள் சுமார் 19 பேர் வீரமரணம் அடைந்தனர். அதனையடுத்து, இந்திய தரப்பில், எல்லை தாண்டி தீவிரவாத முகாம்கள் வீழ்த்தப்பட்டன. இதன் காரணமாக, இந்தியா – பாகிஸ்தான் இடையே சுமூகமான சூழல் இல்லாமல் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

ஐ.எஸ். தீவிரவாதிகள் அச்சுறுத்தலால் கடந்த சில மாதங்களாக தென் மாநிலங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் கேரள மாநிலம் கொச்சியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 6 பேரை தேசியப் புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்தனர். மன்சீத், அபுபஷீர், ஸ்வாலி முகமது, யூசுஃப் ஹன்ஸா, சாஃப்வான், ஜாஸீன் ரம்ஷாத் ஆகிய 6 பேரும் ஐ.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களை கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து நவாஸ், நவாஸ்கான், உபைசுல் ரகுமான், நபி ஆகிய 4 பேரையும் விசார ணைக்காக கோவை மாநகர போலீஸ் அலுவலகம் கொண்டு சென்றனர். அங்கு 4 பேரிடமும் இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை விசாரணை நடத் தப்பட்டது. அப்போது பஷீரு டன் எந்தெந்த வகைகளில் தொடர்பில் இருந்தார்கள்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும், இவர்கள் 4 பேரும் பேஸ்புக்கில் தீவிர மாக கருத்துகளை பதிவு செய்து வந்ததாகவும், எனவே இவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இணைவதற்கு பஷீருடன் தொடர்பில் இருந் தார்களா? என்ற கோணத்தி லும் விசாரணை நடத்தப்பட் டது.

இதற்கிடையே போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றவர்களின் வீடுகள் முன்பு அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இந்தநிலையில் போலீசார் அழைத்து சென்ற 4 பேரும் விசாரணைக்கு பின்னர் அதிகாலை 3 மணிக்கு விடு விக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் 4 பேரையும் இன்று மீண்டும் விசாரணைக்கு வருமாறு கூறி உள்ளனர். விசாரணை முடிவில் அடுத் தக்கட்ட நடவடிக்கை எடுக் கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.