முருகப்பா ஹாக்கி போட்டி: இந்திய ரயில்வே அணி சாம்பியன் பட்டம் வென்றது

90 வது எம்.சி.சி – முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய ரயில்வே அணி சாம்பியன் பட்டம் வென்றது.

சென்னையில் எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியத்தில், எம்.சி.சி – முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் – இந்தியன் ரயில்வே அணிகள் மோதின. இதில் இந்தியன் ரயில்வே அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

ரயில்வே அணிக்கு ரூ.5 லட்சமும், 2-வது இடத்தை பிடித்த ஐ.ஓ.சி. அணிக்கு ரூ.2½ லட்சமும் பரிசாக வழங்கப்பட்டது. சிறந்த வீரர்களாக தேர்வு செய்யப்பட்ட ரயில்வே வீரர்கள் அபான் யூசுப் (சிறந்த முன்கள வீரர்), அமித் ரோஹிதாஸ் (நடுகளம்), ஜக்ராஜ் (கோல் கீப்பர்), மலாக் சிங் (ஆட்டநாயகன்), தமிழக ஹாக்கி யூனிட் வீரர் ஜோஷூவா (வளரும் நட்சத்திரம்) ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரமும், சைக்கிளும் பரிசாக வழங்கப்பட்டது.