உலகின் மிக உயரமான கட்டிடத்தில் குடியிருப்புகளை வாங்கி குவித்த இந்திய தொழிலதிபர்

உலகின் மிக உயரமான கட்டிடமான துபாயில் உள்ள புர்ஜ் கலீபாவில் இந்திய தொழிலதிபரான ஜார்ஜ் நேரியாபரம்பில், 22 குடியிருப்புகளை வாங்கியுள்ளார்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜார்ஜ் நேரியாபரம்பில் துபாயில் தொழிலதிபராக உள்ளார்.

இது குறித்து ஜார்ஜ் நேரியாபரம்பில் கூறுகையில், “எனது உறவினர் ஒருவர் 2,717 அடி உயர புர்ஜ் கலீஃபா கட்டத்துக்குள் என்னால் செல்ல முடியாது என்று கேலி செய்தார். அப்போதிலிருந்து அங்கு குடியேற ஆவலாக இருந்தேன்.

இந்நிலையில், கடந்த 2010-ஆம் ஆண்டு அந்தக் கட்டடத்துக்குள் இருக்கும் ஒரு குடியிருப்பு வாடகைக்கு இருப்பதாக செய்தித்தாளில் விளம்பரம் வந்ததை கண்டேன். அன்றைய தினமே அந்தக் குடியிருப்பில் வாடகைக்குக் குடியேறினேன். அதைத் தொடர்ந்து, அங்குள்ள 21 குடியிருப்புகளை வாங்கியிருக்கிறேன். அதில், சில குடியிருப்புகளை வாடகைக்கு விட்டிருக்கிறேன். இன்னும் அதிக குடியிருப்புகளை வாங்க விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.