நியூசிலாந்துக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 557 எடுத்து ரன்கள் முன்னிலை

இந்தூரில் நடைபெற்று வரும் இந்தியா – நியூசிலாந்து இடையிலான 3 வது டெஸ்ட் போட்டியில், இந்தியா முதல் இன்னிங்கிசில் 557 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இதையடுத்து முதல் இன்னிங்கிசை விளையாடிய நியூசிலாந்து அணி, 299 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதைத் தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 3 வது நாள் ஆட்ட நேர முடிவில், விக்கெட் இழப்பின்றி 18 ரன்கள் எடுத்திருந்தது. இன்று நான்காவது நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் முரளி விஜய் 19 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்ததாக களம் இறங்கிய காம்பீர் அரை சதம் அடித்து அவுட் ஆனார். பிறகு களம் இறங்கிய கோலி 17 ரன்களில் ஆட்டம் இழக்க. அடுத்த முனையில் புஜாரா அபாரமாக விளையாடி சதம் அடித்தார்.

உணவு இடைவேளைக்கு பிள், 3 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 474 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்தது. புஜாரா 101 ரன்களுடனும், ரகானே 23 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.