பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலை குறைந்தது

நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 58 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. அதே சமயம், டீசல் விலை லிட்டருக்கு 31 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படுகிறது. அவ்வகையில் நேற்று பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலையை ஒரு லிட்டருக்கு 58 காசுகள் உயர்த்தியும், டீசலின் விலையில் 31 காசுகள் குறைத்தும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

இந்த விலை உயர்வைத் தொடர்ந்து டெல்லி நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.64.05-க்கு (பழைய விலை ரூ.63.47) விற்பனை செய்யப்படும் என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. இதேபோல் முன்னர் ரூ.52.94 இருந்த ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.52.63 ஆக குறைக்கப்பட்டுள்ளது.