கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சென்னையில் காற்று மாசு அதிகரித்தது

தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடித்ததால் கடந்த ஆண்டை விட காற்று மாசு அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள் செய்திக்குறிப்பு:

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், வாரிய சுற்றுச்சூழல் ஆய்வகங்கள் மூலமாக தீபாவளிக்கு முந்தைய ஒரு நாள் மற்றும் தீபாவளி நாளன்று 24 மணி நேர காற்று தர ஆய்வும், 6 மணி நேர ஒலி அளவு சோதனையும் செய்தும் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் தாக்கத்தை கண்டறிந்து வருகின்றது.

இதன்படி, இந்தாண்டு அக்டோபர் 24ம் தேதியும் அக்டோபர் 29ம் தேதியும் ஆய்வுகள் செய்யப்பட்டு வளிமண்டல காற்றின் தரத்தில் ஏற்பட்ட தாக்கம் ஆய்வு செய்யப்பட்டது. சென்ைன நகரில் காற்று மாசு காரணிகளான மிதக்கும் துகள்கள், சல்பர்-டை-ஆக்ைஸடு மற்றும் நைட்ரஜன்-டை-ஆக்ஸைடு ஆகியவற்றின் அளவு 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளை காட்டிலும் குறைந்த அளவிலேயே காணப்பட்டது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது மழையின் தாக்கம் எதுவும் இல்லாததால் காற்று மாசுவின் அளவு கடந்த 2015ம் ஆண்டை காட்டிலும் அதிகமாக உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 2014ம் ஆண்டு ஆய்வும்  2016ம் ஆண்டும் ஒப்பீடு செய்யப்பட்டது. இதன்படி காற்று மாசு அளவு 2014ம் ஆண்டை விட 2016ம் ஆண்டு குறைந்து காணப்படுகிறது.

இது 7 சதவிதம் முதல் 40 சதவிதம் வரை குறைந்துள்ளது. திருவல்லிக்கேணி குடியிருப்பு பகுதியில் 88 மைக்ரோ டெசிபல், பெசன்ட் நகர் குடியிருப்பு பகுதியில் 72 டெசிபல், நுங்கம்பாக்கம் குடியிருப்பு பகுதியில் 81 டெசிபல், சவுகார்பேட்டை முழுவதும் 80 டெசிபல், தி.நகர் வர்த்தக பகுதியில் 81 டெசிபில் ஒலி மாசு ஏற்பட்டுள்ளது.

இதேபோல், திருவல்லிக்கேணி குடியிருப்பு பகுதி, பெசன்ட் நகர் குடியிருப்பு பகுதி, நுங்கம்பாக்கம் குடியிருப்பு பகுதி, சவுகார்பேட்டை முழுவதும், தி.நகர் வர்த்தக பகுதியில் சல்பைர்- டை -ஆக்ைஸடு மற்றும் நைட்ரஜன்- டை -ஆக்ஸைடு அளவுகள் நிர்ணயிக்கப்பட்ட அளவான 80 மைக்ரோ கிராமிற்கு உட்பட்டதாகவே தீபாவளிக்கு முந்தைய நாள் தீபாவளி இருந்தது. மிதக்கும் துகள்கள் நுங்கம்பாக்கம், சவுகார்பேட்டை, தி.நகர் ஆகிய இடங்களில் நிர்ணயிக்கப்பட்ட 100 மைக்ரோ கிராம் அளவை விட இரு நாட்களிலும் அதிகமாக காணப்பட்டது.

தீபாவளி அன்று 5 இடங்களிலும் மிதக்கும் துகள்களின் அளவு 100 மைக்ரோ கிராம் அளவை விட அதிகமாக காணப்பட்டது. ஆனால், இது கடந்த 2014ம் ஆண்டை விட குறைவானது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.